திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த திலகவதி வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஓன்றியத்தை சேர்ந்த சின்னபாலபாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு கடந்த 7ஆண்டுக்கு முன்பு திருமாணமாகி சபரி(7) என்ற மகன் உள்ளார். கடந்த 2ஆண்டுக்கு முன்பு கார்த்தி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால் திலகவதி தன்னுடைய சகோதிரிகளான கவிதா(19) பாக்கியலட்சுமி (20) ஆகியோருடன் வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்தில் தங்கி வசித்து வந்தார். திலகவதி மாந்தரீகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடை ஒரே மகன் சபரி(7) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி அரியூர் கிராமத்திலிந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு ஆட்டோவில் செல்லும் போது ஆரணி அருகே உள்ள கண்ணமங்கல பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர் இரவு நேரம் என்பதால் நேற்று இரவு 3பெண்கள் மற்றும் குழந்தையை இறக்கி விட்டு சென்றுள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து இயக்கவில்லை இன்று காலை விடிந்த பின், வேறு ஆட்டோவைப் பிடித்து வந்தவாசிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்த அந்தப் பெண்கள், சிறுவன் சபரியின் தலைமுடியை இழுத்தபடியே கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் சென்று தங்கினர்.
அதனையொடுத்து இரவு நேரத்தில் சிறுவன் சபரிக்கு வலிப்பு வந்ததாகவும் தெரிகின்றது. ஆனால் கல்நெஞ்சம் படைத்த தாய் பேய் பிடித்துள்ளது இதனை விரட்டுவதற்காக தன்னுடைய 7வயது மகனின் கழுத்து மீது நின்று கொண்டு சிறுவனை தாய் மற்றும் 2 சித்திகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து சிறுவன் இறந்துவிட்டான்.
சிறுவன் சித்திரவதை செய்வதை கண்டு அங்கிருந்த சிலர் 3பெண்களிடம் தட்டி கேட்டுள்ளனர். அப்போது தட்டி கேட்ட பொதுமக்களை 3பெண்களும் விரட்டியடித்துள்ளனர். பின்னர் தகலவறிந்த வந்த கண்ணமங்கல போலீசார் சம்பவடத்திற்கு வந்து 3பெண்களிடம்மிருந்து குழந்தையை மீட்டு 108ஆம்பூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர், பரிசோதனை செய்ததில் சிறுவன் இறந்துவிட்டான் என்று உறுதியளித்தார். இதனையொடுத்து கல்நெஞ்சம் படைத்த தாய் திலகவதி பாக்கியலட்சுமி, கவிதா ஆகியோரை கைது செய்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரணி அருகே மாந்தீரீகம் என்ற மோகத்தில் சிறுவனை கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தி கொலை செய்யபட்ட சம்பவம் பெரும பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சிறுவனை அடித்து துன்புறுத்திய போது நேரில் பார்த்ததாக கூறப்படும் கண்ணமங்கலம் காசியாமவிடம் கேட்டபோது ,‛‛திடீரென நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது .வீட்டிலிருந்து ஓடிச் சென்று பார்த்த பொழுது மூன்று பெண்கள் ஒரு சிறுவனை அடித்து துன்புறுத்தினர். அப்போது ஏன் அவனை அடிக்கிறீர்கள் என கேட்ட பொழுது, என் மகன் தான் அவனுக்குப் பேய் பிடித்துள்ளது. என்று கூறி பெற்ற மகனை மூவரும் அடித்தனர். அப்போது திடிரென சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒருவர் சிறுவனின் வாயில் கையைவிட்டும், கழுத்தை நெரித்தும் அடித்தனர். இரண்டு பேர் சிறுவனின் கைகால்களை பிடித்து கொண்டு அசையவிடாமல் இருக்கமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து சிறுவனின் கை கால்களை சித்திகள் இருவரும் நீட்டியிழுத்துப் பிடித்துக்கொண்டனர்.
தாய் திலகவதியோ, மகன் என்றும் பார்க்காமல், உடலுக்குள் ஊடுருவிய துஷ்ட சக்தியை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.. இதுமட்டுமின்றி சிறுவனை மடியில் படுக்க வைத்து சபரியின் வாயில் தாய் கையைவிட்டு குடைந்து கொண்டு இருந்தார் .அப்போது சிறுவன் கதறினான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது என் மகனின் மேல் இருந்த பேய் இதயத்தில் நுழைந்துள்ளது, அதனை விரட்ட கையை விட்டு எடுக்கிறேன் என்று கூறினார். அதனை தட்டி கேட்ட பொது மக்களை அவர்கள் வைத்து இருந்த கத்தியால் மிரட்டினர். சிறுவன் என்னை விட்டு விடுங்கள் எனக்கு தொண்டை வலிக்கின்றது என்று கூறி கதறி அழுதான். அதன்பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம்,’ என்று தெரிவித்தார்.