அரக்கோணம் அருகே லாரி ஓட்டுநர் வீட்டில் பள்ளம் தோண்டி நள்ளிரவில்  பூஜை செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது . புதையல் எடுப்பதற்காகப்  பூஜை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருகே  உள்ள கிழவனம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 57 ) லாரி டிரைவர்  . இவர் கிழவனத்தில் தனக்குச்  சொந்தமான பூர்விக வீட்டைக்  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு  பூட்டிக்கொண்டு தற்போது வெளியூரில் வசித்து வருகிறார்.

 



 

 இந்த நிலையில் கிழவனம் கிராமத்தில்  பூட்டி கிடந்த வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன்  வந்த ஆசீர்வாதம் பூட்டி கிடந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்று பூஜைகள் செய்தனர். 

இரவு நேரத்தில் திடீரென பூட்டியிருக்கும் வீட்டில் மணி சத்தம் மற்றும் மந்திரம் உச்சரிக்கும் சத்தம் கேட்டு சந்தேகத்தில் அந்த பகுதி மக்கள் ஆசீர்வாதம் வீட்டிற்குச் சென்று பார்த்தனர் .

 

அப்பொழுது  வீட்டிற்குள் 2 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது . நள்ளிரவில் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து பூஜைகள் நடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

 



 

வீட்டிற்குள் புதையல் இருக்கலாம் அதற்காகப்  பள்ளம் தோண்டி பூஜை செய்கிறாரா
  ? என்று சந்தேகமடைந்தனர்.

 

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பூஜையில் ஈடுபட்ட ஆசீர்வாதம் அவருடன் இருந்த சாமியார் உள்ளிட்டோரை  போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் .

 

மேலும் அவரது வீட்டிலிருந்த பூஜை சாமான்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர் . அரக்கோணம் தாலுகா போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆசீர்வாதம் தனக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும் . அதில் அவரது 3 வது சுலோச்சனாவின்  கணவர் பாண்டியன் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார் எனவும் . அதனால் மகளை தனக்குச் சொந்தமான பூர்விக  வீட்டில் தங்க வைப்பதற்காகக் கூலி ஆட்களை வைத்து வீட்டைச் சுத்தம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீடு ஆண்டு கணக்கில் பூட்டிக் கிடந்ததால் பேய் இருக்கலாம் என்று மந்திரவாதி ஒருவர் கூறினார் அதனால் நள்ளிரவில் பூஜை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

 



பகலில் வீட்டைச் சுத்தம் செய்யாமல் நள்ளிரவில் என் வீட்டைச் சுத்தம் செய்தீர்கள்? புதையல் எடுப்பதற்காகக் குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுராத்திரி குழியை தோண்டுனது ஒரு குத்தமா என குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற காத்திருக்கிறார் ஆரோக்கியம்.