ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள அன்னமய்யா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கொத்தாபேட்டை ராமபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வருபவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா. அவருக்கு வயது 35.


வசுந்தராவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, கணவரை இழந்த வசுந்தரா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும், வசுந்தராவின் கணவர் உயிரிழந்த பிறகு அவரது சொத்துக்கள் முழுவதும் வசுந்தராவின் பெயருக்கு மாற்றி எழுதப்பட்டது.  




இந்த நிலையில், கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வசுந்தராவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை வசுந்தராவின் மாமியார் சுப்பம்மா கண்டித்துள்ளார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.  மேலும், வசுந்தரா தன்னுடைய பேரக்குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற கவலையும் சுப்பம்மாவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க : போதைப்பொருள் கொடுத்து மாணவியை வன்கொடுமை செய்த மாணவன்! வலையில் 20க்கு மேற்பட்ட பெண்கள்!


இந்த நிலையில், வசுந்தராவின் நடவடிக்கை பிடிக்காத சுப்பம்மா தனது மைத்துனர் மதுவுடன் இணைந்து வசுந்தராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, வசுந்தராவை தனது வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட சுப்பம்மா அழைத்துள்ளார். இதையடுத்து, மாமியார் சுப்பம்மா வீட்டிற்கு சென்ற வசுந்தராவை சுப்பம்மாவும், அவரது கணவரின் தம்பியான மதுவும் இணைந்து சரமாரியாக தாக்கியதுடன் அரிவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்தனர்.




கொலை செய்தது மட்டுமின்றி வசுந்தராவின் தலையையும் தனியாக துண்டித்துள்ளார். துண்டித்த தலையுடன் வசுந்தராவின் மாமியார் சுப்பம்மா அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு நேரில் சென்று ஆஜரானார். இதையடுத்து, போலீசார் வசுந்தராவின் உடலையும், அவரது தலையையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மருமகளின் நடவடிக்கை பிடிக்காததால் மாமியாரே தலையை துண்டித்து கொலை செய்ததுடன், துண்டித்த தலையுடன் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று சரண் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சுப்பம்மா தனது மருமகளின் துண்டித்த தலையுடன் வீதியில் நடந்து சென்றதை அங்கிருந்த சிலர் அச்சத்துடன் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க : Crime : ”அந்த பொண்ணையும் அசிங்கப்படுத்திட்டாங்க” : பதைபதைக்க வைக்கும் வீடியோ.. ஓட்டுநர் தற்கொலை.. 


மேலும் படிக்க : Crime : சந்தேகப் பேய்.. கடப்பாறை.. பதறவைக்கும் திட்டம்.. மனைவியை கொன்றுவிட்டு சரணடைந்த கணவர் பகீர் வாக்குமூலம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண