Andhra Pradesh: பப்ஜியில் தோற்றதால் நண்பர்கள் கிண்டல்!! தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுவன்!

ஆந்திராவில் பப்ஜியில் தோற்றதால் நண்பர்களின் கிண்டலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவன்.

Continues below advertisement

 

Continues below advertisement

ஆந்திராவில் பப்ஜியில் தோற்றதால் நண்பர்களின் கிண்டலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட  16 வயது சிறுவன்.


சிறுவன் தற்கொலை

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த, லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் சாந்திராஜ். இவரது மகன் 16 வயதே ஆன சிறுவன். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் பப்ஜி விளையாட்டினை விளையாடியுள்ளார். இதில் போட்டி போட்டு  விளையாடியதில் சாந்திராஜின் மகன் தோற்றுள்ளார். போட்டியில் தோற்றதால் மனமுடைந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அந்த சிறுவனை அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மேலும் மனமுடைந்த அச்சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அச்சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த அச்சிறுவனின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த போது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவனது பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், தங்களது மகனின் சாவுக்கான காரணத்தினை கண்டுபிடிக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

இந்த தற்கொலை வழக்கினை விசாரித்த காவலர்கள், அச்சிறுவன் பப்ஜி விளையாட்டில் தோற்றதன் மூலம் நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் சிறுவனின் உடலை மீட்ட காவலர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவனின் தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமா எனவும் விசாரித்து வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் தோற்றதற்காக தனது உயிரினை மாய்த்துக் கொண்ட சிறுவனின் இறப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர்கள் பப்ஜி விளையாட்டினை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பப்ஜிக்குத் தடை

2019ல் ஏற்கனவே இந்தியா முழுவதும் பப்ஜி விளையாட்டுக்கு இந்திய அரசு  தடை செய்தது. ஆனால் தற்போது வேறுவேறு பெயர்களில் இந்த விளையாட்டானது தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்கள் அனைவரின் உயிரினையும் பறித்து வருவது தொடர்வதால் பெரும் கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola