கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நிசார் அகமது என்பவரை கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர்.
Crime : தாயுடன் உறவில் இருந்தவர் மீது ஆத்திரம்.. இளைஞர் செய்த வெறிச்செயலால் அதிர்ந்த கிராமம்..
இந்த நிலையில் நீதித்துறை நடுவர் வருவதற்காக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளியுடன் காவலர்கள் காத்திருந்தனர். அப்போது, குற்றவாளி கழிப்பறை செல்ல வேண்டும் எனக் கூறி காவலர்களை தள்ளி விட்டு வேகமாக நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தேடினர்.
Crime Scene : விரட்டும் வாகனம்.. நூலிழையில் எஸ்கேப் ஆன வாகன ஓட்டி!
அப்போது குற்றவாளி சங்கராபுரம் பகுதிக்கு தப்பியோடியதை அறிந்த தியாகதுருகம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் குற்றவாளி நிசார் அகமதுவை சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். குற்றவாளி நிசார் அகமது மீது ஏற்கனவே திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்பதியுள்ளது.
Crime Scene : காசு கேட்டால் அட்டாக்.. “பக்கோடா மணி கைது”
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்