மதுரை மாநகர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த  ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த பகுதி செயலாளர் எம்.எஸ் கிருஷ்ணன் என்பவரது வீட்டின்  முன்பாக  திடிரென இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டினுள் எரிந்துவிட்டு தப்பியோடினர். இதில் கிருஷ்ணனின் கார் சேதமடைந்தது. இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான நிலையில் கீரைத்துறை காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 


முன்னதாக, கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பா.ஜ.க. கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றிய நிலையில், கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.






 



கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார். மேலும் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை , கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் வருபவர்களை நிறுத்தி பெயர்கள், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இதேபோன்று கோவை நகர் பகுதியிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்டத் தைத் தொடர்ந்து ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல் செங்கல்பட்டு மாவட்டங் களிலும் பா.ஜ. ஆர். எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டும் வாகனங்களை தீ எரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களால் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.