கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சீரங்கக்கவுண்டனூரை சேர்ந்தவர் பாபு. இவர் மகன் ஜெயராமன் (20). இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அக்கடை உரிமையாளரின் 16 வயதுடைய பிளஸ் 2 படிக்கும் மாணவியான அவரது பேத்தியுடன் நேரிலும், போனிலும் பேசி பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி 11 ம் தேதி தேதி அச்சிறுமியை ஈரோடு மாவட்டம், பெரியவலசுக்கு அழைத்து சென்று அங்கு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜெயராமன் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நேற்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜெயராமனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதன் பிறகு இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கிய தீர்ப்பில், மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, போக்சோ (குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து தடுக்கும்) சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒராண்டு சிறைதண்டனை வழங்கியும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
வெங்கமேடு அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் ரயில்வே தண்வாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அப்பபகுதி பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த சௌந்தர்ராஜன் வயது 46 என்பதும் அவர் ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தற்போது சரியாக வேலை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சௌந்தரராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து சௌந்தரராஜன் ரயின் முன் பாய்ந்த தற்கொலை செய்து செய்து கொண்டாரா அல்லது ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்