Subbiah Shanmugam: பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு - கைதான சுப்பையாவுக்கு ஜாமீன்..!

கடந்த 2 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென சட்ட பிரிவுகளை மாற்றியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Continues below advertisement

அண்டை வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் சுப்பையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Continues below advertisement

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்துவரும் டாக்டர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆதம்பாக்கம் போலீசார் டாக்டர் சுப்பையாவை கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், கடந்த 2 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென சட்ட பிரிவுகளை மாற்றியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த  வழக்கில் ஜாமீன் கோரி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக எந்தவிதமான முன்னேற்றம் இல்லாதபோது சட்ட பிரிவுகளை மாற்றியமைத்து மீண்டும் வழக்கு பதிய என்ன காரணம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்?. மேலும்  சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்ததாக கீழ்ப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறை தலைவரான டாக்டர் சுப்பையா ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார். அரசு பணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களுக்கு இவர் உதவியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மீது மருத்துவ கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola