திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர் மேல்பட்டு, சந்தவாசல், போளூர் ஆகிய வனசரகங்கள் உள்ளது. இந்த ஜவ்வாது மலையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வாழக்கூடிய மலைவாழ் மக்கள் தங்களுடைய விலை நிலத்தில் விலையகூடிய திணை, கேழ்வரகு, பலாப்பழம் ,சீதாப்பழம் ,வாழைப்பழம் உள்ளிட்டவற்றை விலையவைத்து மலையின் கீழே உள்ள வேலூர், போளூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, செங்கம், உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவர்கள். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜவ்வாது மலையில் சந்தன மரங்கள் இல்லை என்ற நிலை உருவானது. இதனால் சந்தன கடத்தல் வழக்குகள் முற்றிலும் குறைந்து விட்டன. மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த வன ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது படித்த பட்டதாரி இளைஞர்கள் வனத்துறையில் பணியாற்றுவதால் மலைவாழ் மக்களுக்கு எந்தவித நெருக்கடிகள் இல்லாமல் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஜவ்வாது மலை நாடானூர் வனச்சாரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சீதாப்பழம் லாரியின் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்துள்ளது. அங்கு வந்த வனக்காப்பாளர் சதீஷ்குமார் வயது (35) என்பவர் சீதாப்பழம் லோடு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனில் 1000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்கு மலைவாழ் மக்கள் நாங்கள் வனப்பகுதியில் இருந்து எடுத்து செல்லவில்லை விவசாய நிலங்களில் இயற்கையாக விளையும் பழங்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம், இதை கேட்டபதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை பட்டா நிலத்திலிருந்து எடுத்து செல்வதற்கு கிராம உதவியாளர் தான் கேள்வி கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வன ஊழியர் நான் சீதாப்பழத்துக்கு பணம் கேட்கவில்லை அதன் மேலே போட்டு வைத்துள்ள இலைகளை வனப்பகுதியில் இருந்து எடுத்து உள்ளீர்கள், அதற்கு தான் அபராதம் விதித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி சொன்னால் தாசில்தார் வந்து 50 ஆயிரம் கேட்பார்கள் கொடுத்துவிட்டு போங்க எனக்கு சந்தோசம் தான் என்று கூறினாராம்.
சிறிது நேரத்தில் நான் அபராதம் போட்டால் கட்ட மாட்டீங்களா வண்டியை நிறுத்துங்கடா நான் வண்டியை சோதனை போடணும் இதில் சாராயம் கடத்துவதாக எனக்கு புகார் வந்துள்ளது என நான் கூறுவேன். நாங்கள் லோடு இறக்க மாட்டோம் பணமும் தர மாட்டோம் இதுவரைக்கும் நாங்கள் சீதாப்பழத்திற்காக யாருக்கும் பணம் கொடுத்ததில்லை உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிலுக்கு மலைவாழ் மக்கள் கண்டிப்புடன் பேசினர். இதற்கு வனத்துறை அலுவலருடன் மலைவாழ் மக்களுக்கும் இடையே நடந்த காரசார உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது. இதனை ஏபிபி நாடு செய்தி நிறுவனத்தின் மூலம் செய்தி வெளியிட்டு இருந்தோம், அதன் அடிப்படையிலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வன அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார். இதனையடுத்து வன அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய வன காப்பாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார்.