திண்டிவனம் அருகே சினிமாவில் வருவதுபோல் நடந்த விபத்து; நடந்தது எப்படி..?

விழுப்புரம்: திண்டிவனம் அருகே 2 பைக், ஆவின் பால் டேங்கர் லாரி, கார் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழந்த நிலையில், வாகனங்கள் தீக்கிரையானது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பைக்கில் கூட்டேரிப்பட்டில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே திசையில் பைக்கில் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராமதாஸ்(50) (லாரி உரிமையாளர்)என்பவர் ஓட்டி வந்த பைக் இளையராஜா ஓட்டி சென்ற பைக் மீது மோதி உள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமதாஸ் மீது திருச்சியில் இருந்து சென்னைக்கு ஆவின்பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ராமதாஸ் மீது ஏறி சக்கரத்தில் மாட்டி தரதரவென இழுத்துச் சென்றது. இதில் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Continues below advertisement

அப்போது சாலையில் விபத்தில் சிக்கி நின்ற பைக் மீது திருச்சியிலிருந்து வந்தவாசி சென்ற கார் மோதியது. இதில் பைக்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது காரை ஒட்டி வந்த சேட்பட்டு அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன் சீனிவாசன்(39) மற்றும் காரில் பயணம் செய்த 4 பேர் காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் கார் மலமலவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில் இரு சக்கர வாகனம், ஆவின் பால் டேங்கர் லாரி, கார் ஆகியவை எரிந்து சாம்பலானது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மயிலம் போலீசார் உயிரிழந்த ராமதாஸின் உடலை கருகி நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான ஆவின் பால் டேங்கர் லாரியில் இருந்த பாலை கீழே இறக்கி விட்டு, கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி உரிமையாளா் ராமதாஸ் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரான சின்னசேலம் அடுத்த வீரபயங்கரம் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (27) திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் யார்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola