விழுப்புரம் : விக்கிரவாண்டியில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவன் சந்தேகப்பட்டு சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தனது இரு குழந்தைகளை கொண்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


மனைவி அதிக நேரம் போன் பேசியதை கண்டித்த கணவன் 


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கோபிநாத், பொன்னரசி ஆகிய தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கோபிநாத்தின் மனைவி பொன்னரசி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதால் சந்தேகமடைந்த கனவர் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் உள்ள தேவாலயத்திற்கு கோபிநாத், மனைவி பொன்னரசி இரு குழந்தைகளான கிர்த்திகா, மோனிஷ் ஆகிய இருவருடன் சென்றுள்ளனர்.


தேவாலயத்திற்கு சென்ற கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவி குழந்தைகளை பேருந்தில் ஏற்றி விக்கிரவாண்டிக்கு அனுப்பி விட்டு கணவர் கோபிநாத் டி என் பி எஸ் சி தேர்விற்கு தயாராகி வருவதால் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.


தற்கொலை 


விக்கிரவாண்டிக்கு சென்ற மனைவி பொன்னரசி தனது கணவர் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிடுவதால் விரக்தியிலிருந்த பெண் வீட்டிற்கு சென்று இரு குழந்தைகளை கொண்றுவிட்டு வீட்டிலையே தூக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு சென்ற கணவர் கோபிநாத் வீட்டின் கதவு உள்பக்க பூட்டப்பட்டு இருந்ததால் மனைவிக்கு செல்போனில் அழைப்பு விடுத்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த கணவர் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் இறந்த நிலையிலும் மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதுள்ளார்.


போலீஸ் விசாரணை 


இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டனர். மனைவி மீது கணவன் சந்தேகப்பட்டதால் மனைவி இரு குழந்தைகளை கொண்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்கொலை செய்து கொள்வது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வல்ல. மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.



சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)