Mumbai Murder : கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு நான்கு சகோதரிகள் இருந்துள்ளனர். இந்நிலையில், அவர்களிடம் போலீசார் இன்று விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 


கொடூர கொலை


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 56 லயதான மனோஜ் சானை என்பவர் லின் இன் பாட்னரான சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை அப்புறப்படுத்த துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும் சில உறுப்புகளை சமையலறையில் குக்கரிலும் வேகவைத்து சமைத்து நாய்களுக்கு போட்டுள்ளார். மேலும், மற்ற உறுப்புகளை வறுத்தும், மிக்சியில் அறைத்தும் அதனை வாளிகளில் அடைத்துள்ளார்.


இதனால் துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் அறிந்ததும் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவை கைது செய்துள்ளனர். பின்னர், உடல் உறுப்புகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


புதிய ட்விஸ்ட்


இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு நான்கு சகோதரிகள் இருந்துள்ளன. அவர்கள் மூன்று பேரிடம் போலீசார் இன்று விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, குற்றச்சாட்டப்பட்ட மனோஜ் சானேவை பார்த்தபோது தான் அனாதை என்று கூறப்பட்ட சரஸ்வதிக்கு தற்போது நான்கு சசோதரிகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் போலீசார் சரஸ்வதியின் சகோதரிகளிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர். 


அப்போது, ”கடந்த மூன்று ஆண்டுகளுக்கு சரஸ்வதியும், மனோஜ் சானேவும் மும்பையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி தனது சகோதரிகளிடம் கூறிய சரஸ்வதி, மற்றவர்களிடம் வயது வித்தியாசம் காரணமாக மனோஜ் சானேவை தனது தாய் மாமா என்று மற்றவர்களிடம் கூறியுள்ளார். இந்த விஷயத்தை குடிபெயர்ந்த வீட்டின் உரிமையாளர்களிடம் கூறி தங்கியுள்ளனர்” என்று கொலை செய்யப்பட்ட சரஸ்வதியின் சகோதரிகள் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


பின்னர், இருவரும் ஒரே வீட்டில் வசித்துவந்தபோதும் கூட, சரஸ்வதி தனது சகோதரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். அனாதை இல்லத்தில் வாழ்ந்த வந்த தனது சகோதரிகளை சரஸ்வதியும் மனோஜூம் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்படி ஒரு நாள் சந்திப்பில் சரஸ்வதி மிகவும் சோர்வாக இருந்தார்” எனவும் அவரது சகோதரிகள் போலீசாரிடம்  தெரிவித்தனர். 


காரணம் என்ன?


இது ஒரு பக்கம் இருக்கையில், ”சரஸ்வதிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகவும் தன்னை ஏமாற்றி வருவதாகவும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவரிடம் பலமுறை கேட்டு சண்டையிட்டேன். ஒரு கட்டத்தில் சரஸ்வதியை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனால் அவரை கடுமையாக அடித்து உதைத்தில் இறந்துவிட்டாள். பின்னர், எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் எனக்கு டெல்லியில் காதலி ஷரத்தாவை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டியது நினைவுக்கு வந்தது. அதேபோலவே சரஸ்வதியை  துண்டு துண்டாக வெட்டிக் கொன்றேன்” என மனோஜ் சானே வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீஸ் தெரிவித்துள்ளது