திருவல்லிக்கேணி அருகே எதிர்பாராவிதமாக சிறுவன் ஒருவன் பால்கனியில் இருந்து தவறி விழுந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அருகே திருவல்லிக்கேணியில் வசிப்பவர் செந்தமிழ். இவர் டீக்கடையில் பணிபுரிபவர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு நிதிஷ், நிதேஷ் என 4 வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தனர். இவர்கள் மாடி வீட்டில் வசிக்கிறார்கள். நேற்று முன்தினம், வீட்டு முதல்மாடியில் உள்ள பால்கனியில் இரண்டு மகன்களும் விளையாடி கொண்டிருந்தனர். குழந்தைகளின் அம்மா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நிதிஷ் சாலையில் செல்லும் வாகனங்களை எட்டிப் பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென கால் தவறி நிதிஷ் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு குழந்தை அழும் சத்தம் கேட்டு பால்கனிக்கு வந்த தாய், குழந்தை விழுந்தை கண்டு அதிச்சி அடைந்தார்.
அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு நிதிஷூக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி நிதிஷ் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.