விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் முகமது சலீம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்றிரவு வேலை முடிந்து, வீட்டின் முன்பு தனது சொகுசு காரை நிறுத்தி விட்டு, உறங்கச் சென்றுள்ளார். நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே முகமது சலீமுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக முகமது சலீம் வெளியே ஓடிவந்து, கார் தீப்பற்றி எரிவதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்தத் தகவலின் பேரில், தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இருப்பினும், கார் எரிந்து நாசமாயின. இதையடுத்து முகமது சலீம், எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது. எனவே, கார் தானாக தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்தார். இருப்பினும் போலீசார், தங்கள் விசாரணையைத் தொடங்கினர். அதில், கார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்