ஹைதாராபாத்தில் தாய்ப்பால் கொடுப்பதுத் தொடர்பாக கணவன் மனைவி இருவரிடையே ஏற்பட்ட சண்டையால் பிறந்து 22 நாளே ஆன குழந்தை உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திச்செய்துக்கொள்ளவதற்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் தவிர குழந்தைகளை முறையாகப் பராமரிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சன உண்மை. அதிலும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதிகள் என்றால் சொல்ல முடியாத அளவிற்கு மனச்சுமை அதிகம் இருக்கும். ஒர்க் ப்ரஷர் ஒருபுறமும், வீட்டில் குழந்தைகளை எப்படி பராமரிக்கப் போகிறோமோ,? என்ற கவலை பணிபுரியும் பெண்களுக்கு அதிகளவில் உள்ளது.
இதுப்போன்ற காரணங்களினாலே பலர் குழந்தைகளை தாமதமாகப்பெற்றுக் கொள்ளலாம் என முடிவு எடுக்கின்றனர். அதை மீறியும் குழந்தைப்பிறக்கும் போது தான் பிரச்சனையை கணவன் மற்றும் மனைவி எதிர்கொள்கின்றனர். அதிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டிலேயே குழந்தைகளைப்பராமரித்துக்கொண்டு பணிபுரிவது என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாகவும், சண்டைக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் ஹைதாரபாத்தில் அரங்கேறியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பிறந்து 22 நாளே ஆன குழந்தை உயிரிழந்தது தான் பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஹைதராபாத்தில் ராஜேஷ் மற்றும் ஜானவி தம்பதியினர் வசித்துவருகின்றனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில், கடந்த 22 நாள்களுக்கு முன்னதாக இவர்களுக்கு குழந்தைப் பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பேசிய நிலையில், அலுவலக பணி இருந்தமையால் என்னால் இனிமேல் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர முடியாது என ஜானவி கூறியதாகத் தெரியவருகிறது. இப்படி இவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான், ஆத்திரமடைந்த ராஜேஷ் கையில் கிடைத்தக் குழாயினை வைத்து ஜானவி அடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் ஜானவியின் தோளில் குழந்தை இருந்தமையால், அக்குழந்தையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வீடு முழுவதும் ஓடியுள்ளார். இதனால் தொடர்ச்சியாக அழுதுக்கொண்டே இருந்த குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. இதனால் பதறிப்போய் என்ன என்று பார்த்த தம்பதியினர் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றநிலையில், மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் மூச்சுத்திணறல் காரணமாக தான் குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், என்ன நடந்தது?என விசாரணை மேற்கொண்டனர். அதில் பிறந்து 22 நாளே ஆன குழந்தை மூச்சுத்திணறால் உயிரிழந்ததையடுத்துத் தம்பதியினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.