எனக்கும் ஒரு ரவுண்டு... வீடு வாடகை எடுத்து சூதாட்டம்... வசமாக சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்...
விழுப்புரத்தில் வீடு வாடகை எடுத்து சூது விளையாட்டில் ஈடுபட்ட 9 பேரை தாலுகா போலீசார் கைது செய்து, 60 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீடு வாடகை எடுத்து சூது விளையாட்டில் ஈடுபட்ட 9 பேரை தாலுகா போலீசார் கைது செய்து, அவர்களிடத்தில் 60 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் நகர பகுதியான விராட்டிக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் வீட்டில் பணம் வைத்து சூது விளையாடுவதாக தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சண்முகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சின்னதுரை என்பவரின் வீட்டில் தனிப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். சோதனையின் போது நாவம்மாள்,மோகன்ராஜ், ரஞ்சித், மகேஷ், வடிவேலன், சிவா, ஜாகீர்,ஸ்ரீகாந்த்,மகேஷ் திருநங்கை சம்பா உள்ளிட்ட 9 பேர் சீட்டு கட்டில் பணம் வைத்து விளையாடி கொண்டிருந்தனர்.
Just In




இதனையடுத்து சூது விளையாடிய 9 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 60 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். போலீசாரின் விசாரனையில் நாவம்மாள் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து சூது விளையாட்டில் விளையாடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரையும் தாலுக்கா போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சூதாட்டம் Gambling என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும். சில நாடுகளில் சூதாட்டம் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.