கரூரில் முன்விரோதம் காரணமாக சதி திட்டம் தீட்டி பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்ட 2 பெண்கள் உட்பட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 கை துப்பாக்கிகள், தோட்டாக்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர், பழனிவேல் நகரைச் சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி என்பவர் தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு, திருமாநிலையூரைச் சேர்ந்த சோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து ராயனூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா, என்பவருக்கும் தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததால், விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த 10.09.2024-ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு சோபனாவின் கணவர் முகேஷ் (எ) ராமசுப்பிரமணி, விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் தனது வீட்டில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர்
மேற்படி முகேஷ் (எ) ராமசுப்பிரமணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்து ஆயுதங்களை கைப்பற்றி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படி, கரூர் நகரம் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு
முகேஷ் (எ) ராமசுப்பிரமணி அளித்த தகவலின் அடிப்படையில், அவரது கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம், சின்னமலைப்பட்டி ரஞ்சித் சக்கரவர்த்தி, திருச்சி மாவட்டம், பலூர் கோபால் (எ) பெரிய கோபால்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரமாத்தி தோட்டம்செந்தில் (எ) ஓட்டக்காது செந்தில் (எ) சின்னசாமி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை யுவராஜ், ஈரோடு மாவட்டம், வெள்ளாளபாளையம், மூர்த்தி,
கரூர் மாவட்டம்,கோட்டையண்ணன் கோவில் தெரு, பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகியோர்களையும், ஷோபனா ரம்யா ஆகியோரையும் சேர்த்து ஒன்பது பேர் கொண்ட கும்பலை தனிப்படையினர்
கைது செய்து அவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் 6, கத்தி மற்றும் அறிவாள்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.