பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது லூதியானா. இந்த மாவட்டத்தில் உள்ள பஸ்தி ஜோத்வால் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பிய சிறுமியின் தாயார், சிறுமி அழுவதை கண்டுள்ளார். உடனே சிறுமியிடம் வந்து பார்த்தபோது சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


இதையடுத்து, சிறுமியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொரட்பாக பஸ்தி ஜோத்வால் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம்  முன்பு சிறுமியின் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.




அவர்கள் போலீசார் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர் அஜய்குமார் என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் கணேஷ் என்பவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


மேலும் படிக்க : போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் - விடுதலை செய்ய கோரி மாணவிகள் சாலை மறியல்


இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், விசாரணையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக அஜய் அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை கண்ட அஜய்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது, அவரது நண்பர் கணேசும் உடனிருந்ததை கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளிகளான அஜய் மற்றும் கணேஷ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து, அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.




சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால் சிறுமி தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை


மேலும் படிக்க : சிவகங்கை ரிமோட் வெடிகுண்டு வழக்கு ; நீதிமன்றம் 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண