தமிழகத்தில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மது கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கள்ளச்சந்தை மது விற்பனையாளர்கள் கரூர் நகரத்தில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடந்து வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலுக்கு ரகசிய தகவல் வந்தது
கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளிலும், அதைத்தொடர்ந்து அதனை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அரசு மதுபான கூடம் அருகே மது விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது உறுதியானது.
பின்னர் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றிய கரூர் நகர காவல் துறையினர் அதைத்தொடர்ந்து கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக ரகசிய தகவலையடுத்து, அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்யப்பட்டதை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். அங்கு போலீசார் வருகையை பார்த்த மது பிரியர்கள் ஓட்டம் எடுத்தனர். இந்நிலையில் அங்கு மது விற்பனை கள்ளச்சந்தை ஈடுபட்ட நபரின் மேற்பார்வையிடும் ஓட்டம் பிடித்தார். அவரை கரூர் நகர போலீசார் ஓடிச்சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அங்கு விற்பனைக்கு ஈடுபட்டிருந்த நபரையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது மதுபான கூடத்திலும் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அங்கு மது விற்பனை நடைபெற்றது. உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த கள்ளச்சந்தை மது விற்பனையாளர்களையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்
கரூர் நகர இன்று காலை முதல் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தீவிர கள்ளச்சந்தை மது விற்பனை குறித்து சோதனையில் தஞ்சாவூரைச் சேர்ந்த வேம்பரசன் , சிங்கம்புனரியை சேர்ந்த பிரசாந்த், கரூர் தென்னிலை பகுதியைச் சேர்ந்த வடிவேல் உள்ளிட்ட 7 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 110 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X" >இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X
இதைத் தொடர்ந்து தீவிர கள்ளச்சந்தையில் மது விற்பனை தேடும் பணியில் கரூர் மாவட்ட போலீசார் மற்றும் நகர போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நகர பகுதியில் மட்டும் சுமார் இரண்டு மணி நேர சோதனையில் 110 பாட்டில்கள் கள்ளச்சந்தையில் கைப்பற்றப்பட்டன.கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டால் இன்னும் பல்வேறு மது பாட்டில்களும், விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர்.