கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி சம்பாரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பங்காருசாமி (64) என்பவர். நேற்று காலை கடலூர் முதுநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு அவர் தனது அண்ணன் மகனின் வீடு கட்டும் பணிக்காக தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து, ஒரு பையில் வைத்து உள்ளார். பின்னர் அதனை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள இருக்கையின் கீழ் பகுதியில் வைத்துக் கொண்டு, கடலூர் சாவடி பகுதியில் உள்ள தனது அண்ணன் மகனின் வீட்டுக்கு புறப்பட்டார். 

 



 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் காலை 11.30 மணி அளவில் வந்த போது, அங்குள்ள ஒரு இனிப்பு கடை முன்பு பங்காருசாமி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, பலகாரம் வாங்க சென்று உள்ளார். பின்னர் 10 நிமிடத்தில் திரும்பி வந்து வீட்டிற்கு சென்று உள்ளார், வீட்டிற்கு சென்றோழுது இருசக்கர வாகன இருக்கை மேலே தூக்கியபடி இருந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இருக்கையின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியை பார்த்தார்.அப்போது அதில் வைத்திருந்த பணப்பையையும் காணவில்லை. இதனால் பதறிய அவர், மீண்டும் கடைக்கு திரும்ப சென்று உள்ளார் பின்னர் அங்கிருந்த நபர்களிடம் விசாரித்தார். பின்னர் கடையில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறி கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார் அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ஒருவர் வாகனத்தில் தயாராக நின்றுகொண்டு இருக்க மற்ற ஒருவர் பங்காருசாமியின் இருசக்கர வாகனத்தில் உள்ள இருக்கையை நைசாக திறந்து, அதன் கீழ் பகுதியில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி சென்றது வண்டியில் ஏறி சென்றது தெரிய வந்தது.

 



 

இதுகுறித்து அவர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வண்டிப்பாளையம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அதனை அடிப்படையாக கொண்டு, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.கடலூரில் பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையம் அருகே உள்ளது வண்டிப்பாளையம் சாலை மேலும் இங்கு எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டபகலில் சாலையில் இருந்த வாகனத்தில் இருந்து 6 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கி உள்ளது.