நான் அவன் இல்லை திரைப்படம் இரண்டு பாகங்களாக வந்து தமிழில் பெரும் ஹிட் அடித்திருந்தது. அதில் இருக்கும் ஒரே கான்செப்ட், ஒரு பணக்கார பெண்ணை மயக்கி, அவரிடம் உள்ள பணத்தை செலவு செய்துவிட்டு, அவரோடு விளையாடிவிட்டு ஏமாற்றி செல்வதுதான். ஹீரோ இதனவ் வெவ்வேறு கெட்டப் போட்டு படத்தில் செய்தது போலவே, டாக்டர், உயர்பதவி அரசு அதிகாரி என்று பல ரூபங்களில் 14 பெண்களிடம் விளையாடிய ரியல் லைஃப் மன்மதனை புவனேஷ்வர் காவல்துறை பிடித்துள்ளது. ரமேஷ் ஸ்வய்ன் என்று அழைக்கப்படும் பிபு பிரகாஷ் ஸ்வய்ன் என்பவர் 14 பெண்களை வெவ்வேறு பெயரில், வெவ்வேறு வேலை செய்யும் நபராக சென்று ஏமாற்றி அவருடன் குடும்பம் நடத்தி காசயெல்லாம் எடுத்துக்கொண்டு மறைந்துவிடுகிறார் என்று புவனேஷ்வர் டிசிபி உமாசங்கர் டாஷ் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், அவரை கைது செய்வதற்கு முன்பு வரை டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இண்டோ-திபெத் பர்டாரின் உயர் அதிகாரி, உள்ளிட்ட 14 பெண்களை ஏமாற்றி இருக்கிறார்.



டாஷ் பேசுகையில்,"அவருடைய ஒரே நோக்கம் திருமணம் செய்து முடித்ததும், பெண்ணின் சொத்துக்களை அபகரித்து, பணத்தை எடுத்து செல்வது மட்டுமே. மேட்ரிமோனி சைட் மூலமாகதான் இவர் பெண்களை பிடிக்கிறார். பஞ்சாப், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் இவரது சித்து வேலையை காட்டியுள்ளார். விவாகரத்து செய்து அடுத்த திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள், வயது அதிகமாகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள்தான் இவரின் டார்கெட். இந்த பெண்கள் அவர்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ள ஒரு துணையை தீவிரமாக தேடுவதால் அவர்களையே தேடி சென்று எளிதில் ஏமாற்றி விடுகிறார். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு படித்து, பெரும் பதவிகளில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர், இவர் இந்த வேலையை 2002-இல் இருந்து செய்து வருகிறார்." என்று தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு ஆர்ய சமாஜ் கோவிலில் ஒரு ஆரிரியையை திருமணம் செய்துள்ளார். அந்த ஆசிரியை இவருக்கு வேறு திருமணங்கள் நடந்ததை 2021ல் கண்டுபிடித்ததால், ஜூலை மாதம் அவர் மீது புகார் அளிக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கந்தகிரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த ரமேஷ் ஸ்வய்னை போலீசார் கைது செய்தனர்.



அவர் மீது பிரிவுகள் 498 (A) (ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் அவளைக் கொடுமைக்கு உள்ளக்குவது), 419 (ஆளுமை மூலம் ஏமாற்றியதற்காக தண்டனை), 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலித்தனம் செய்வது) மற்றும் 471 (போலி ஆவணத்தைப் பயன்படுத்தி ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது கைது செய்தபோது அவரிடம் 11 எடிஎம் கார்டுகள், வெவ்வேறு பெயரில் 4 ஆதார் கார்டுகள், அதிலும் இல்லாத பெயரில் பிஹார் பள்ளி சான்றிதழ் ஆகிவை சிக்கின. இவர் 1982ல் ஒரு திருமணமும், 2002ல் ஒரு திருமணமும் செய்திருக்கிறார். இவருக்கு தற்போது ஐந்து குழந்தைகள் உள்ளன. விசாரணையின்போது இவர் ஏற்கனவே 2011ல் கைது செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி மாணவர்களை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 2 கோடி வரை பெற்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். "இவரை இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இவரிடம் இருந்து மேலதிக தகவல்கள் பெறவேண்டியுள்ளது. அதற்காக நீண்ட நாட்கள் ரிமாண்டில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சமுக அந்தஸ்து காரணமாக இன்னும் பல பேர் வெளியில் வந்து புகார் அளிக்காமல் இருக்கலாம். அனைத்தையும் கண்டுபிடிக்க அதிக நேரம் தேவை" என்று டாஷ் கூறினார்.