பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லா பூரில், தனது சொந்த மகள்களையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


உத்திரபிரதேச மாநிலம் அப்துல்லாப்பூரில் 48 வயதான பெண்மணி ஒருவர் , தனது  கணவர் ( வயது 50 ) தனது சொந்த மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் தனது புகாரில்  தெரிவித்ததாவது : ” எனக்கு  மொத்தம் ஐந்து மகள்கள் இருக்கின்றனர் , அதில் இருவருக்கு திருமணமான நிலையில் 24 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்களும் , மேஜர் ஆகாத மற்றொரு மகளும்  வீட்டில் இருக்கின்றனர்.. இதில் 24 வயதான தனது மகளை , தான் வீட்டில் இல்லாத சமயத்தில் கணவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை நான் ஒரு நாள் கண்கூடாக பார்த்ததும் அவருக்கு எதிராக நான் காவல்துறையில் புகார் கொடுக்க கிளம்பினேன் . ஆனால் தான் தெரியாமல் இப்படி செய்துவிட்டதாகவும் , இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். உடனே பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். அதன் பிறகு தனது  18 வயது மகளின் நடத்தையில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவள் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள். நான் அவளிடம் பலமுறை அவளின் மாற்றத்திற்கு என்ன காரணம், ஏன் இப்படி இருக்கிறாய் என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டேன். ஆனால் அவள் பதிலளிக்க மறுத்துவிட்டாள். இந்த நிலையில்தான் எனது மகள்களில் ஒருவர் கர்பிணியாக இருந்ததார்.  அவளை பார்த்துக்கொள்வதற்காக , அவள் வீடு வரையில் சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரியிடம் , எனது மகள் நடந்த வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்திருக்கிறாள். அதிர்ந்து போன நான் எனது கணவரை தொடர்புக்கொண்டு, ஏன் இப்படி செய்தாய் , நான் உன் மேல் புகார் அளிக்கப்போகிறேன் என்றதும் அவர் என்னை மிரட்டினார்.” என தெரிவித்துள்ளார்.




50 வயது முதியவரின் இந்த தகாத செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏஎஸ்ஐ அவ்தார் சிங், போலீசார் ஐபிசியின் 376 (2) எஃப், 376 ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்து செய்திருப்பதாக கூறினார். சமீப காலமாக தந்தை, மாமனார், மைத்துனர், சகோதரன் என  சொந்த வீட்டிலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கும் செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.