Accident: வீரப்பூர் அண்ணமார் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் மீது மோதி 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் உள்ள அண்ணன்மார் கோவிலுக்குச் சென்றுவிட்டு திருச்செங்கோடு திரும்புகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ரவியின் மனைவி கவிதா, கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி மற்றும் சுதா ஆகிய ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 5 வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயத்துடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.