ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பஜ்ஜி, போண்டானு சாப்பிட்டு போரடிச்சி போச்சா? எதாச்சி வித்தியாசமா சாப்பிடனும் போல இருக்கா? வாழைப்பழம், கோதுமை மாவு , வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வச்சி ரொம்ப ஈசியா டேஸ்டியான வாழைப்பழம் அப்பம் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - 1 கப் வெல்லம் அல்லது 1/2 கப் (பொடித்தது), அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,நன்கு பழுத்த வாழைப்பழம் - 1, ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,  சமையல் சோடா - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு மற்றும் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். ( கரண்டில் எடுத்து ஊற்றும் அளவிற்கு மாவின் பதம் கெட்டியாக இருக்க வேண்டும்)

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் தயார்.


குறிப்பு : வெல்லம் பாகு செய்யும் போது தண்ணீர் குறைவாக விட வேண்டும் . வெல்லம் உருகி நுரை நுரையாக பொங்கி வரும். அப்போது அதில் இருந்து ஒரு துளி வெல்லப் பாகை கரண்டியால் எடுத்து ஒரு பாதியளவு தண்ணீர் இருக்கும் சிறிய டம்ளரில் விட்டுப் பார்க்க வேண்டும். பாகு கட்டியாக தண்ணீருக்கு அடியில் போய் நின்றால் பாகு சரியான பதத்திற்கு வந்து விட்டது என்று அர்த்தம். பாகு தண்ணீரில் கரைந்து விட்டால் மீண்டும் பாகு பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். 


மேலும் படிக்க


Amethi: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி ..பக்காவாக ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்


IND Vs IRE 1st T20 LIVE: முதல் ஓவரிலே 2 விக்கெட்டுகள்... மிரட்டும் பும்ரா.. திணறும் அயர்லாந்து..!