சீர்காழியில் சாலையில் கிடந்த குப்பைகளை உண்ட மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்கா தெருவை சேர்ந்த மல்லிகா என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகள் காலை வழக்கம்போல மேய்ச்சலுக்கு சென்றுள்ளனர். மேய்ச்சலுக்கு செல்லக்கூடிய இடங்கள் அனைத்தும் வீட்டுமனைகள் ஆக்கப்பட்டு, வீடுகள் நிறைந்த பகுதிகளாக மாறியதால் மாடுகள் அனைத்தும் நகராட்சி சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலைகளில் கிடக்கும் குப்பைகளை உணவாக மேய்ந்து வருகின்றனர்.


Bigg Boss 7 Tamil:'வன்மம் நிறைந்த வீடா இருக்கு' சரமாரி கேள்வி கேட்கும் கமல்! ஆடிப்போன போட்டியாளர்கள் - இன்றைய பிக்பாஸில்!




4 மாடுகள் உயிரிழப்பு:


இந்த நிலையில் சீர்காழி சன்னதி தெருவின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அந்த மாடுகள் மேய்ந்துள்ளது. குப்பைகளை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து சரிந்து கீழே சாய்ந்தன. வாயில் நுரை தள்ளியும், கால்கள் வெட்டி வெட்டி இழுத்தும் துடி துடித்து சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் உயிரிழந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான இருந்த மேலும் ஒரு மாட்டுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் முயற்சி ஈடுபட்டனர். ஆனால்  அந்த மாடும் சிலமணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 


Dhruva Natchathiram: 3 கோடி இல்லை, 60 கோடியாம்.. 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாகத் தடையாக இருக்கும் சிக்கல்!




மேலும் சாலையோரம் கிடந்த குப்பையைச் தின்று அடுத்தடுத்து மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குப்பைகளை உண்டதால் மாடுகள் இறந்ததா? அல்லது மாடுகள் தெருக்களில் சுற்றி திரிவது பிடிக்கமால் யாரேனும் மாடுகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார்களா? என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தங்கள் வாழ்வாதாரமான மாடுகள் உயிரிழப்பில் இருந்து மீண்டுவர அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மாட்டின் உரிமையாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்


ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!