திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி ( police canteen) இயங்கி வருகிறது. இந்த பல்பொருள் அங்காடியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறமும் மாவட்ட ஆயுதப்படை காவல்துறை அலுவலகத்தின் பின்புறத்திலும் மற்றும் காவல் துறையினர் மைதானத்தின் அருகிலும் அமைந்துள்ளது. இந்த தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியில் காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அங்காடியை காலையில் திறக்கப்பட்டு மாலையில் மூடிவிட்டு காவலர்கள் செல்வார்கள். காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் 24 மணிநேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியை காலையில் திறந்து பொருட்களை விற்பனை செய்து விட்டு மாலையில் வழக்கம்போல் பொருட்களை சரிபார்த்து விட்டு அங்காடியை காவல்துறை காவலர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் இன்று காலையில் தமிழ்நாடு காவலர்கள் பல்பொருள் அங்காடியை காவலர்கள் திறக்க வந்துள்ளனர். அப்போது பல்பொருள் அங்காடியின் பூட்டு உடைக்கப்பட்டு அங்காடி திறந்தவாறு உள்ளதாக கூறப்படுகிறது. பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது காவலர்கள் உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்காடியில் அடிக்கி வைக்கப்பட்ட பொருட்கள் சிதறி கிடந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது உடனடியாக காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தமிழ்நாடு காவலர்கள் பல்பொருள் அங்காடியில் வந்து அங்கு வேலை செய்யும் காவலர்களிடம் விசாரணை நடத்தி. இந்த விசாரணையில் அங்காடியில் இருந்த தனியார் நிறுவனத்தின் விலை உயர்ந்த 42 அகல டிவி ஒன்றும் மற்றும் 32 அகல டிவி இரண்டு என மூன்று எல்.இ.டி (LED TV) டிவிகளை மர்ம நபர்கள் நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். அங்காடியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு இருந்து விலை உயிர்ந்த செல்போன்களும் திருடு போனதாக கூறப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அங்காடியில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் பொதுமக்களையிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை நகர் பகுதிகளில் தொடர்திருட்டு சம்பவங்கள் நடைபெறு வருகிறது.