தங்கக் கட்டிகளை பறிமுதல்
துபாய், இலங்கையிலிருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட, ரூ.1.58 கோடி மதிப்புடைய, 3.158 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி, உட்பட 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, அவருடைய சூட்கேசில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
" 800 கிராம் தங்கம்
அதைப்போல் இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சோதனை இட்டபோது, இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பசை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு பயணிகளிடம் இருந்தும், ரூ. 43 லட்சம் மதிப்புடைய, 800 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, இரு பயணிகளையும் கைது செய்தனர்.
சர்வதேச மதிப்பு ரூ. 1.15 கோடி
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பணி முடிந்து வெளியில் சென்று கொண்டிருந்த, விமான நிலைய ஊழியர்களை, சோதனை இட்டபோது, ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர், அவருடைய பேண்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவைகள் 2.3 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 1.15 கோடி. இதை அடுத்து விமான நிலைய ஊழியரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
3.158 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ.1.58 கோடி மதிப்புடைய 3.158 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்