தொலைக்காட்சியில் போடப்படும் குற்றம் சம்பவம் தொடர்பான நிகழ்ச்சிகள் நம்முடைய விழிப்புணர்விற்காக போடப்படும். அந்தவகையில் மிகவும் பிரபலமான சிஐடி என்ற நிகழ்ச்சி குற்ற சம்பவங்கள் தொடர்பானவற்றை தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்து இரு சிறுவர்கள் ஒரு கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் கடந்த 30ஆம் தேதி இரவு 70 வயது மதிக்க தக்க முதியவர் ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய மரணம் தொடர்பாக அவரின் மகன் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் அவருடைய வீட்டில் இருந்து சுமார் 1.7 லட்சம் ரூபாய் விலை மதிப்பலான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்த கொலை தொடர்பாக இரு சிறுவர்கள் சம்பந்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பின்னர் அந்த கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அக்டோபர் 30ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் இந்த இரண்டு சிறுவர்களும் அந்த முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி வீட்டிற்கு இந்த சிறுவர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். எனவே இவர்களுடன் அந்த மூதாட்டி நன்றாக பேசியுள்ளார். அந்த சமயத்தில் அந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவர்களின் வீட்டிலிருந்து 93 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 67,500 ரூபாய் மதிப்பில் உள்ள நகைகளையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சிறுவர்களில் ஒருவர் அடிக்கடி சிறிய திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் இருவரும் இந்தச் செயலை செய்ய காரணம் என்ன என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதாவது இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிஐடியை பார்த்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம் திருட முயற்சி செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் வந்த குற்ற சம்பவம் போல் இவர்கள் இருவரும் திட்டமிட்டு திருடியுள்ளனர். அவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதால் அவர்களை காவல்துறையினர் தற்போது வரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது `அண்ணாத்த’!