அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். விமான கழிவறையின் தண்ணீர் தொட்டியில் தங்கத்தை மறைத்து வைத்து விட்டு, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

" இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறை "

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை 8:20 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, காலை 10 மணிக்கு, சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னதாக விமான ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறை, தண்ணீர் தொட்டியில் பார்சல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.இதை அடுத்து விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, அவசரமாக சென்னை விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.

 


chennai international airport - சென்னை சர்வதேச விமான நிலையம்


 

 

பார்சலை மெட்டல் டிடெக்டர் மூலம்


இதை அடுத்து விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து, விமானத்துக்குள் ஏறி, அந்த தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பார்சலை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்தனர். அப்போது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதை அடுத்து அந்த பார்சலை வெளியில் எடுத்து பிரித்து பார்த்தனர்.

 

பார்சலில் சுமார் 1. 4 கிலோ தங்க கட்டிகள் 


அந்தப் பார்சலில் தங்கக் கட்டிகள் இருந்ததை கட்டுப்பிடித்தினர். அந்த பார்சலில் சுமார் 1. 4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி. இதை அடுத்து, விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளை, சென்னை விமான நிலைய சுங்க  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


சென்னை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் - Chennai Airport


 

 

சென்னை விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சி


அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமி, கடத்தல் தங்கத்தை விமானத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, கீழே இறங்கி வெளியில் சென்றுவிட்டார். அதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமி, இந்த விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்கு  உள்நாட்டு பயணிகள் விமான டிக்கெட் எடுத்து, இந்த விமானத்தில் பயணித்து, ஹைதராபாத் சென்றதும் இந்த தங்க கட்டியை எடுத்துவிட்டு வெளியில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இந்த கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசாமிகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.