15 பேர் கைது
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கரூர் மாவட்டம் மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மாயனூரை சேர்ந்த ஸ்ரீதர் வயது 35, புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி வயது 44, சிதம்பரம் வயது 37, வெள்ளாளப்பட்டி சேர்ந்த ராஜா வயது 35, குஜிலியம்பாறை சேர்ந்த ரமேஷ் குமார் வயது 36, குளித்தலையைச் சேர்ந்த பாலு வயது 30, தங்கதுரை வயது 46, ரஞ்சித் வயது 35, ரவிக்குமார் வயது 28, சுந்தரமணி வயது 45, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த கோபால் வயது 57, ரங்கநாதபுரத்தை சேர்ந்த சம்பந்தம் வயது 40, மேட்டு மகாநதபுரத்தை சேர்ந்த சண்முகம் வயது 41, பில்லா பாளையத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா வயது 37, சரவணன் வயது 45 ஆகிய 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 111 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனை.
கரூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான போலீசார் கரூர் தேக்கமலை மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சேர்ந்த சசிகுமார் வயது 29, தாமரை தரன் வயது 20, வேலுச்சாமி வயது 20 ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது 46, இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவை எடுத்து கொண்டு சணப்பிரட்டி மேலப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்து ஒருவர் நிறுத்தினார். பின்னர் அவர் தான் ஒரு பையில் வைத்திருந்த ஒன்றை கிலோ கஞ்சாவை ரவிக்குமாரிடம் விற்க முயன்ற போது, இது குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஆர்த்தி சம்பவம் இடத்திற்கு கஞ்சாவை விற்க முயன்ற கிருஷ்ணராயபுரம் கள்ளிப் பள்ளியைச் சேர்ந்த ராஜா வயது 36 என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.