குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்ஜில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஜ்ஜின் புறநகர் பகுதியில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு, அவருக்கு சாராயம் கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அந்தச் சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என போலீசார் இதுகுறித்து ஞாயிறு அன்று கூறினர்.


 கடந்த மார்ச் 16 அன்று புஜியா பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் உள்ள பண்ணையில் இந்த சம்பவம் நடந்ததாக கட்ச் மேற்குபகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறியுள்ளார். வன்முறைக்கு ஆளான இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அருகில் வசிப்பவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், என்றார்  அவர். 


"அவர் தனது நண்பர் ஒருவருடன் பண்ணைக்கு சென்றுள்ளார், அங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை மது அருந்த வைத்துள்ளனர். பிறகு அதை அவர்களும் குடித்துவிட்டு, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று மேலும் அவர் கூறினார்.


அண்மையில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் சிறுமியை பாலியல்  வன்புணர்வு செய்த குற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமிக்கு பள்ளியில் பாலியல் ரீதியான தொடுதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் பள்ளி ஆசிரியரிடம் தனக்கு நடைபெற்று வரும் சம்பவம் தொடர்பாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். அதன்படி 2017ஆம் ஆண்டு முதல் அந்தச் சிறுமியை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு அச்சிறுமியை அவருடைய சகோதரரும் பாலியல் ரிதியாக வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இவர்கள் தவிர அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோரும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்துள்ளதாக அச்சிறுமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நடைபெற்றுள்ளது. இவர்கள் ஒருவர் செய்த பாலியல் வன்கொடுமை மற்ற நபர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சிறுமியின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவருடைய தந்தை(45) மட்டும் சகோதரர் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அச்சிறுமியின் தாத்தா மற்றும் மாமா மீது ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தற்போது வரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி ஒருவரை அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே 5 ஆண்டுளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.