14 வயது சிறுமியை டாக்டர், அவரது உதவியாளர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 14 வயது சிறுமி கடந்த 16ஆம் தேதி டாக்டர் மற்றும் அவரது உதவியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சிறுமி அருகிலுள்ள மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக வெளியே வந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில், உதவியாளார் சிறுமியை கிளினிக்கிற்குள் அழைத்து, மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. டாக்டரின் பெயர் ராம்பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடு திரும்பிய சிறுமி வலியால் கதறி அழுதபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. Student Suicide | ”பாலியல் துன்புறுத்தலால சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்..” கரூர் பள்ளி மாணவி தற்கொலை.. அதிரவைக்கும் கடிதம்..
இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தாய் கூறுகையில், "என் மகள் டாக்டரை நம்பி கிளினிக்கிற்குள் நுழைந்தபோது, ஒரு அறைக்குள் அடைத்து அவளை அமைதியாக இருக்கும்படி மிரட்டினர். பின்னர், டாக்டரும், உதவியாளரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், முதற்கட்ட அறிக்கையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Online Game Addiction | பெரும் பரபரப்பு.. வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகைகளுடன் தப்ப முயன்ற மாணவன்.. என்ன நடந்தது?
புகாரைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக அலகஞ்ச் காவல் நிலைய போலீஸ் அதிகாரி அஜப் சிங் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 வயது சிறுமி ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்