திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசூரான் வயது (35) இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தில் நேற்று இரவு ஓசூரான் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகள் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து ஓசூரான் வந்தவாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுதுபட்டு கிராமத்தில் சபரிநாதன் என்பவரின் நிலத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று 12 நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் காவலதுறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுடதில் விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பதும் தெரியவந்தது. மேலும் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்,ரிஷினாத்,கிரிதரன், முகமதுஆசிக், துரைமுருகன், தமிழ்வேலன், கார்த்திகேயன், தினேஷ், அன்பு,சக்திவேல்,வசந்த் ஆகியோர் தெரியவந்தது மேலும் விசாரணையில் சிறையில் இருந்து வெளியே வந்த ஓசூரான் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆகியோர் பல்வேறு குற்றச் செயலுக்கு சிறையில் சென்று வெளியே வந்துள்ளதும் ஓசூரானை மீண்டும் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு செயலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் குற்றச் செயலுக்கு வர மறுத்ததால் ஓசூரான் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசியது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 நபர்கள் சென்னை பரங்கிமலை விருகம்பாக்கம் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 12 நபர்களை கைது செய்து அவரிடமிருந்து மூன்று கத்திகள் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் வந்தவாசி காவல்துறையின் நடவடிக்கை எடுத்து 12 குற்றவாளி நபர்களை கைது செய்துள்ளனர்.12 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.