மதுரை மண்டல வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு சார்பாக, மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டியூர் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிற்காமல் சென்ற மினி வேனை 5 கி.மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் சுமார் 1000 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மினி வேனை பறிமுதல் செய்த வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், வணிகவரித்துறை வாகன சோதனையில் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல், மதுரை பேரையூர் முக்கு ரோடு பிரிவு அருகே பெட்டிக்கடையில் சம்சுதீன் என்பவர், பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது போலீசார் செய்தனர். மேலும், இது சம்பந்தமாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் சுமார் 353.963 கிலோ கிராம் இதன் மதிப்பு ( ரூபாய் 1,73,736/-) மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா , புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகையிலைக் பொருட்களை பயன்படுத்துவதால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளை தடுக்க ஏதுவாக அதுகுறித்த தகவல்களை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு வாருங்கள்.. ஓபிஎஸ் சொந்த ஊரில் எம்ஜிஆர் கையெழுத்துடன் போஸ்டர்கள்..!