ஜொ்மனி நாட்டிலிருந்து சென்னை பழைய விமான நிலையத்திற்கு வெளிநாட்டு சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் பரிசோதனை செய்தனா். அப்போது ஜொ்மனியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த பாா்சல் ஒன்றில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது .
சென்னை சுங்கத்துறையினருக்கு அந்த பாா்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா். அது முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. போனை எடுக்கவில்லை. அதன்பின்பு சென்னை முவரிக்கு சென்று விசாரித்தனா்.வீடு பூட்டியிருந்தது.அங்கு இளைஞா்கள் சிலா் தங்கியிருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து சென்னை சுங்கத்துறையினா் இன்று காலை அந்த பாா்சலை பிரித்து பாா்த்து ஆய்வு செய்தனா்.அந்த பாா்சலுக்குள் 100 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். அவைகள் மிகவும் விலை உயா்ந்தவை. செல்வந்தா்கள் முக்கியமான பாா்ட்டிகளில் பயன்படுத்துபவைகள். அந்த 100 போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், வழக்குப்பதிவு செய்து, இந்த போதை மாத்திரைகளை பரிசு பொருள் என்ற பெயரில் ஜொ்மனியிலிருந்து. வரவழைத்த இளைஞா்களை தேடி வருகின்றனா். பிடிபட்ட போதை மாத்திரைகள் எம் டி எம் ஏ வகையை சேர்ந்த எக்ஸ்டஸி மாத்திரை என சுங்கத்துறை ஊழியர்கள் உறுதி செய்தனர். பார்சல் சென்ற முகவரியை வைத்து தற்போது சென்னை சுங்கத்துறை ஊழியர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
எக்ஸ்டஸி மாத்திரை :-
எக்ஸ்டஸி என்பது ஒரு சட்டவிரோதமான மருந்து ஆகும், இது செயல்பாட்டு மூலப்பொருள் MDMA ( 3, 4- மீத்திலென்டைக்ஸ் மெயாம் பேட்டமைமைன் ) கொண்டிருக்கிறது. இது தூண்டுதல்கள் மற்றும் ஹலசினோஜென்களுடன் தொடர்புடையது மற்றும் மனநிலை மற்றும் உணர்வுகள் ஆகியவற்றின் விளைவுகளை உருவாக்குகிறது.