உத்தரபிரதேச மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோர விபத்து:
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழக்கிழமை ) காலை 4.30 மணியளவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதியது. பயணம் செய்த 17 பேரில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . படுகாயமடைந்த 7 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதில் இருவர் உயர் சிகிச்சைக்காக பரேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வாருக்கு ஆன்மீக பயணம் சென்ற சுற்றுலா பயணிகள் இன்று காலை வீடு திரும்பிய பொழுது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கஜ்ரௌலா பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததால் , அப்பகுதி காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை என்பதால் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வேனை மரத்தின் மீது மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதிகரிக்கும் சாலை விபத்து :
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணெக்கெடுப்பின் படி ,தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிவிரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் ஏற்பட்ட மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 1.16 லட்சம். ஒரு நாளைக்கு சராசரியாக 300 முதல் 400 பேர் வரையில் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். விபத்தில் கிட்டத்தட்ட 70 சதவிதத்தினர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதாலும் , 6 சதவிகிதத்தினர் சாலை விதியை முறையாக பின்பற்றாததாலும் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் அடங்குவர். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான விபத்துகள் பகலில்தான் நடக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்