விரைவில் 10 நிமிட உணவு டெலிவரியை(Zomato 10 Minute Delivery) அறிமுகப்படுத்தும் சொமாட்டோ


நாட்டிலேயே முதன்முறையாக அதிகவேக உணவு டெலிவரியை சொமாட்டோ(Zomato) நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் திபீந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி உணவு 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். 
இதுகுறித்து ட்விட்டரில் பேசியுள்ள திபிந்தர் கோயல், ‘உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10 உணவு டெலிவரி நேரமும் 10 நிமிடம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 






மேலும், ‘வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விடைகளுமே வேகமாகத் தேவைப்படுகிறது.அவர்கள் உணவுக்காக நீண்டநேரம் காத்திருக்க விரும்புவதில்லை’ என இந்தப் பத்து நிமிட டெலிவரிக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக, சோமாட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான ஃக்ரோபர்ஸ் தனது நிறுவனத்துக்கு மறுபெயரிட்டுள்ளது. விரைவான வர்த்தகம் அல்லது அதிகபட்சமாக 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதைக் குறிக்கும் வகையில் Blinkit என தனது நிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளது. 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மளிகைப் பொருட்களை வழங்குவதற்கான முயற்சியைத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது தனது பெயரை அந்த நிறுவனம் மாற்றியுள்ளது. "நாங்கள் க்ரோஃபர்களாக நிறைய கற்றுக்கொண்டோம், எங்கள் கற்றல், எங்கள் குழு மற்றும் எங்கள் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் புதிய தயாரிப்பு அல்லது அதிவேக வர்த்தகம் என ஏதாவது ஒன்றை முன்னெடுப்பதற்காக மீண்டும் ஆயத்தமாகி உள்ளோம். இன்று, நாங்கள் ஒரு புதிய நிறுவனமாக முன்னேறி வருகிறோம்.


அதனடிப்படையில் நாங்கள் எங்கள் பணியை இனி Grofers ஆக செய்ய மாட்டோம் - அதை Blinkit ஆகச் செய்வோம்," என்று Grofersன் இணை நிறுவனர் மற்றும் தலைவர் அல்பிந்தர் திந்த்ஸா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். க்ரோஃபர்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது. உணவு சேகரிப்பு நிறுவனமான Zomato நிறுவனத்திடமிருந்து 120 மில்லியன் டாலருக்கும் மேலாகத் திரட்டிய பிறகு. "எங்களுக்கு நிறுவனர்களைப் போல சிந்திக்கக்கூடிய நபர்கள் தேவை பணியாளர்களைப் போல அல்ல, நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், உங்களை நம்பி, 10 நிமிடங்களில் உலகை மாற்ற உங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்கள்," என்று திண்ட்சா மேலும் கூறினார். Grofers தனது வணிகத்தின் கவனம் எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்ட Blinkit என்ற புதிய பெயரை சேர்த்துள்ளது. பல இந்திய மாநிலங்கள் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால், கடந்த ஆண்டில் க்ரோஃபர்ஸ் அதிவேகமாக மக்களிடையே பரவலானது.