வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி அதிக செயல்திறன் மதிப்பீடுகளை பதவி உயர்வுகளை வழங்குகிறது. WFO, WFH (வொர்க் ஃப்ரம் ஹோம்) மற்றும் ஹைப்ரிட் ஆகியவற்றில் ஆக்ஸிஸ் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மதிப்பெண்கள் ஒப்பிட முடியாதவை என சிறப்பு பணியாளர் நிறுவனமான Xpheno-னின் இணை நிறுவனர் கமல் காரந்த் தெரிவித்துள்ளார்.


மும்பை: கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொலைதூரத்தில் பணிபுரியும் பழக்கம் உருவான நிலையில், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது குறித்து ஊழியர்களிடையே பெரும் குழப்பம் நிலவியது. தற்போது கொரோனா தொற்று சீரடைந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலைக்கு இடையே தனியார் கடன் வழங்கும் ஆக்சிஸ் வங்கி, வீட்டில் இருந்து பணிபுரியும் தனது ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.


தொலைதூரத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக  ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ராஜ்கமல் வேம்படி கூறியுள்ளார்.


இதற்கிடையில் ஆக்ஸிஸ் நிறுவனம் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு ‘GIG-A-Opportunities’ என்ற புதிய தளத்தை உருவாக்கியது, இது சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மாற்று வேலை சாம்பிள்களுக்கான புதிய தளமாகும், இது  work from home போன்று இல்லாமல்  'எங்கிருந்தும் வேலை' போன்று குறிப்பிட்ட நேரம் மற்றும் வேலை என்ற சிறப்பு அம்சத்தை கொண்டது. தனியார் கடன் வழங்குபவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘GIG-A-Opportunities’ என்ற புதிய தளத்தை உருவாக்கியது. இது சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மாற்று வேலை மாதிரிகளுக்கான புதிய தளமாகும், இது work from home போன்று இல்லாமல் 'எங்கிருந்தும் வேலை' மற்றும் குறிப்பிட்ட நேரம்  வேலை செய்தால் போதும் என்ற சிறப்பு அம்சத்தை கொண்டது. இந்த தளம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 15 சதவீதம் வரை கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தப்படுவதை இலக்காகக் கொண்டிருப்பதாகக் ஆக்ஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது 30 சதவீத தகுதியுள்ள பணியாளர்கள் இந்த தளம் மூலம் வேலை செய்வதாக கூறப்படுகிறது.


மேலும் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன. ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் விப்ரோ நிறுவனமும் குறைந்தது 3 நாட்களுக்கு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.