தங்கள் நிதியை மேலாண்மை செய்வதற்காக தனிநபர்கள் தங்களுக்கு வேண்டிய நிதி ஆதாரத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சேமிப்புத் திட்டத்தின் வகைகளுள் முக்கியமான தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD). ஒரு பெரிய தொகையை வைத்திருந்தால் மட்டுமே வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும் எனக் குறிக்கும் நிலையான வைப்புத்தொகையைப் போல இல்லாமல், தொடர் வைப்புத்தொகைக்கான முதலீட்டை ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளலாம்.


மேலும், நிலையான வைப்புத்தொகைக்கு ஈடான வட்டி விகிதமும் இதில் கிடைக்கும். மாதாந்திர சேமிப்பு மூலமாக நல்ல தொகையை இறுதியில் பெறுவதோடு, ஒரே நேரத்தில் பெரிய தொகையை சேமிக்காமல் இருக்கவும் இந்தத் திட்டம் பயன்படும். மற்ற அனைத்து சேமிப்புத் திட்டங்களைப் போலவே, தொடர் வைப்புத்தொகையும் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற்றது. மேலும், இது பாதுகாப்பானது. தற்போது வட்டி விகிதம் அதிகரித்து வருவதால், தொடர் வைப்புத்தொகைக்கான வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கு இது உகந்த நேரம். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதமாக உயர்த்தியவுடன் பல்வேறு வங்கிகள் தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. அதன் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்... 


ஹெச்.டி.எஃப்.சி வங்கி


கடந்த ஜூன் 17 அன்று, ஹெச்.டி.எஃப்.சி வங்கி சில தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. தற்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 5.75 சதவிகித வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகித வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது. 


ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி


ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் மொத்தமாக 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு தொடர் வைப்புத்தொகை சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சில தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. தற்போது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 5.75 சதவிகித வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவிகித வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி



IndusInd வங்கி


IndusInd வங்கியில் குறைந்தபட்சமாக 9 மாதங்கள் முதல் 61 மாதங்கள் வரையிலான காலத்திற்கும், அதற்கும் மேலான காலத்திற்கும் தொடர் வைப்புத்தொகை சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. IndusInd வங்கி  கடந்த ஜூன் 1 அன்று, சில தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. தற்போது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.5 சதவிகித வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகித வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது IndusInd வங்கி


ஆர்பிஎல் வங்கி


7 நாள்கள் முதல் 240 மாதங்கள் வரையிலான காலத்திற்கான தொடர் வைப்புத் திட்டங்களை வழங்கும் ஆர்பிஎல் வங்கி கடந்த ஜூன் 8 அன்று தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. 24 மாதங்கள் குறைந்தபட்சமாகவும், அதிகபட்சமாக 36 மாதங்கள் வரையிலான காலகட்டத்திற்கு வைப்புத்தொகை செலுத்தும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.5 சதவிகித வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகித வட்டி விகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. 



கோடக் மஹிந்திரா வங்கி


கோடக் மஹிந்திரா வங்கியில் குறைந்தபட்சமாக 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கும், அதற்கும் மேலான காலத்திற்கும் தொடர் வைப்புத்தொகை சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி கடந்த ஜூன் 10 அன்று, சில தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. தற்போது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 5.9 சதவிகித வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 6.4 சதவிகித வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது.


யெஸ் வங்கி


யெஸ் வங்கி கடந்த ஜூன் 18 அன்று, சில தொடர் வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது. தற்போது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 6.5 சதவிகித வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவிகித வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது.