UPI Down: யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்; பயனர்கள் அவதி! NPCI சொல்வது என்ன?

UPI Transactions Down In India: இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனை முடங்கியுள்ளதால் பயன்ர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Continues below advertisement

நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை முடங்கியுள்ளது.  UPI சேவை முடங்கியுள்ளதால் ஏராளமான பயனர்கள் சிரமத்தை எதிர்கொண்டர். PhonePe, Google Pay, Paytm ஆகிய நிறுவனங்களின் யு.பி.ஐ. சேவைகள் இன்று (12.04.2025) காலை முதல் முடங்கியுள்ளது. பயனர்கள் லாகின் செய்வது, பரிவர்த்தனை மேற்கொள்ள முடியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Continues below advertisement

NPCI பதில்

டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைவது தொடர்பாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக யு.பி.ஐ. சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. யு.பி.ஐ. சிக்கல்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 


 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola