இந்திய ரிசர்வ் வங்கி UPI வசதியை வணிகப் பணம் செலுத்துவதற்காக உள்வரும் பயணிகளுக்கு நீட்டிக்க முன்மொழிந்துள்ளது; ஆரம்பத்தில் G20 நாடுகளின் பயணிகளுக்கு.


டிஜிட்டல் பேமெண்ட்


இந்தியாவில் சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு UPI என்பது மிகவும் பிரபலமானது. ஃபோன் பே, கூகுள் பே, பாரத் பே, அமேசான் பே, பேடிஎம், பே பால் தொடங்கி வாட்ஸ்அப் வரை யுபிஐ-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பணப்பரிவர்த்தனை வெகுவாக குறைந்து எங்கு திரும்பினாலும் 'பெறப்பட்ட பேமண்ட் ரூபாய்…' என்ற சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்து இந்தியாவை சுற்றிப்பார்க்கும் பலரும் கையில் பணமாகவே வைத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பல சுற்றுலா தலங்களில் உள்ள கடைகளும், அங்கு செல்லும் பயணிகளும் இதனால் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதற்காகவே இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்.பி.ஐ. வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும், இந்தியாவில் இருக்கும் போது, அவர்களின் வணிகப் பணத்தை(P2M) செலவு செய்ய UPI ஐப் பயன்படுத்த அனுமதிக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.



நிதிக்கொள்கை குழு முடிவுகள்


மும்பையில் ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கை குழு கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் கீழ் எடுக்கபட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். வங்கிகளுக்கு கடன் தரும் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வாகனக் கடன், வீட்டு லோன் ஆகியவற்றின் வட்டி உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதோடுதான் இந்த முக்கிய அறிவிப்பும் வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Aavin Recruitment: ஆவினில் இருக்கும் பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும்.. அதிரடி அறிவிப்பு..


முதலில் ஜி20 நாடுகளின் பயணிகளுக்கு


இதன் தொடக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் G-20 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருபது பேர் ஜி-20 குழுவில் இந்தியா இல்லாமல் மேலும் 19 நாடுகள் உள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துர்கியே , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முதலில் இந்த வசதி கிடைக்கும்.



வெளிநாட்டு மொபைல் எண்கள் இணைப்பு


"இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளும், நாட்டில் இருக்கும்போது அவர்களின் வணிகப் பணம் செலுத்துவதற்காக UPI கட்டணங்களைப் பயன்படுத்த அனுமதிக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் G20 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். "முன்னோக்கிச் செல்ல, நாட்டில் உள்ள மற்ற அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும். தேவையான செயல்பாட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்," என்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த அறிக்கையில் மத்திய வங்கி கூறியது. "UPI ஆனது இந்தியாவில் சில்லறை மின்னணு முறையில் பணம் செலுத்தும் கருவியாக மாறியுள்ளது. NRE/NRO கணக்குகளுடன் சர்வதேச மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI அணுகலை வழங்குவதற்காக இவ்வாறு சமீபத்தில் மேம்படுத்தப்பட்டது" என்று மத்திய வங்கி குறிப்பிட்டது.