இந்தியாவில் படிப்படியாக டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக UPI என சொல்லக்கூடி, டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து ஆன்லைனில் பணப்பரிவர்தனை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement


பொட்டிக்கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை 


இன்றைய சூழலில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கு, UPI மிகவும் முக்கிய வழியாக இருந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இதன்மூலம் சில்லறை தட்டுப்பாடு பெருமளவில் குறைவதால், பெட்டி கடையில் கூட இன்று இந்த பரிவர்த்தனை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக சிக்கல் இல்லாமல் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், பலரும் விரும்பி இதை பயன்படுத்தி வருகின்றனர். 


 UPI இல் உள்ள சிக்கல்கள் 


ஒரு சில நேரங்களில் UPI பண பரிவர்த்தனை நேரம் அதிகமாக இருப்பது பயனாளிகளுக்கு சிக்கலாக இருந்து வருகிறது. அதேபோன்று ஒரு சில நேரங்களில் தோல்வியடையும் ட்ரான்ஸ்லேஷன்கள் ( Failed Transaction ) ஆகும்போது அது மீண்டும் பணம் வருவது தாமதமாக வருகிறது. 


பண பரிவர்த்தனைக்கான நேரம் மற்றும் பரிவதனை தோல்வி அடைந்தால் பணம் கழிக்கப்பட்டு விட்டதா ? இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு 30 வினாடிகள் வரை எடுத்துக் கொள்கின்றன.


UPI மூலம் பணம் பெறுபவரின் முகவரி சரி பார்ப்பதற்கான பதிலளிப்பு நேரம் 15 வினாடிகளாகவும் இருந்து வருகிறது. இவற்றைக் குறைக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு புதிய விதிகளை தேசிய பண பரிவர்த்தனை கழகம் அமல்படுத்தியுள்ளது.   


இனி எல்லாமே ஸ்பீடு தான் 


இதனைத் தொடர்ந்து UPI சேவையில் பல்வேறு அசத்தல் அப்டேட்டுகள் வந்துள்ளன.‌ UPI பண பரிவர்த்தனைக்கான நேரம் மற்றும் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் பணம் கழிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளும் நேரம் ஆகியவை, 30 வினாடிகளில் இருந்து 10 வினாடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 


இதேபோன்று UPI மூலம் பணம் பெறுபவரின் முகவரியை சரி பார்ப்பதற்காக பதில் அளிப்பு நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தோல்வியடையும் பரிவர்த்தனை (Failed Transaction) ஆகும்போது Transaction Reveral நேரமும், பணம் நேரமும் 30 நொடிகளிலிருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நொடிகளிலிருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனதை அறிந்து கொள்ளும் நேரமும்