இந்திய அளவில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, இன்று மற்றும் நாளை நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர் வங்கி ஊழியர்கள். தேசிய அளவில் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். நாடுமுழுவதும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் சுமார் 13 ஆயிரம் வங்கிக்கிளைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் வங்கி பரிவர்த்தனை ஏதும் செய்யமுடியாமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இந்திய அளவில் சுமார் 16,500 மதிப்புள்ள 2 கோடி காசோலைகள் வங்கியில் தேக்கமடைந்துள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. C.H.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
வங்கிகள் மூடலால் பரிவர்த்தனை மற்றும் இன்றி பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறையை தொடர்ந்து தற்போது மேலும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ATMகளிலும் பணம் இல்லாமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.