Just In

காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்

"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

"மக்கள் வயிற்றில் அடிக்க வேணாம்" கொதித்த இபிஎஸ்

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறு

இழுத்து செல்லப்பட்ட மனநல பாதிக்கப்பட்ட பெண்.. சிறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரிகள்
புதிய திட்டத்தால் பரிதவிக்கும் பள்ளப்பட்டி.. மீண்டும் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் மக்கள்
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி
சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
Continues below advertisement

krishnasamy
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி அக்கூட்டணியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு விலகியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் புதிய தமிழகம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவித்தார். இதையடுத்து, சென்னையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் 60 நபர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கிருஷ்ணசாமி வெளியிட்டார். அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அவர் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.