சென்னை, மதுரையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை


தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ரூ.160-ஆக விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை கடைகளில் ரூ.200 முதல் ரூ.210 வரை விறபனை செய்யப்படுகிறது. சென்னை திருநெல்வேலியில் தக்காளி விலை ரூ.200-க்கு விற்பனையாகிறது. தக்காளி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.144-க்கும் விற்பனையாகிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் ரூ.140-க்கும் சேலத்தில் தக்காளி கிலோ ரூ.135-க்கும் விற்பனையாகிறது. 



மதுரையில் தக்காளி கிலோ ரூ.150 விற்பனை


மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.130-க்கு விற்பனையான நிலையில் இன்று ஓரே நாளில் ரூ.20 உயர்ந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


பண்ணை பசுமைக் கடை ரேசன் கடைகளில் தக்காளி விற்றும், விலை குறையவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த பிறகும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பண்ண பசுமைக் கடை, ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தொடர்ந்து கடந்த பல வாரங்களாகவே தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி 130வது ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரையில் காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம்  ரக தக்காளி 130 ரூபாய்க்கும், 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை 1000 ரூபாய்-2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



 

அதேபோல நேற்று 2-ம் ரக தக்காளி ஒருகிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் தொடர் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள், சாமானியர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆடி மாதம் தக்காளியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல கத்தரிக்காய் 50 ரூபாய் , வெண்டைக்காய் 40 ரூபாய் , கேரட்- 50 - 70 ரூபாய், பாவைக்காய் 40, 60 ரூபாய், புடலங்காய் 30 ரூபாய், பீன்ஸ் 100,120 ரூபாய், சின்ன வெங்காயம் ,60,90 ரூபாய், பெரிய வெங்காயம் 15,30 ரூபாய், இஞ்சி புதியது 130,160 ரூபாய் பழைய இஞ்சி 260 ரூபாய், உருளைங்கிழங்கு 50 ரூபாய், பீட்ரூட் 50 ரூபாய், முருங்கை 35ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.