சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1000 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 125 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை காணலாம். 

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்க விலை:

தங்கத்தின் விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து சவரன் விலைக்கு 74,320-த்தை கடந்தது. இது வரலாற்றில் உட்பட்ச விலையாக இருந்தது. 

கடந்த ஏப்ட, 28-ம் தேதி சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, 71,520 ரூபாய்க்கு விற்பனையாது. தொடர்ந்து, 29-ம் தேதி 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 71,840 ரூபாக்கு விற்பனையாது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,980 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, அட்சய திருதி நாளான யான ஏப்ரல் 30-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், மே-1 அன்று தங்கத்தின்ம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமிற்கு 205 குறைந்து ஒரு கிராம் 8,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம் என்ன.?

நேற்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 70,200 விற்கபட்டது. இந்த நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 125 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,025 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேப்போல ஒரு சவரன் தங்கத்தின் விலை 1000 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு 72,200  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 1160 உயர்ந்துள்ளது. 

கடந்தஆறு நாட்களில் தங்கத்தின் விலை:

05.06.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ.72,200

05.05.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ.71,200

04.05.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ 70,040

03.05.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ.70,040

02.05.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ.70,040 01.05.2025: 1 சவரன் (22 காரட்) - ரூ.70,200

வெள்ளி நிலவரம் என்ன?

வெள்ளி விலையும் கிராமிற்க்கு 3 ரூபாய் உயர்ந்து, 111 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலையும் 3000 ரூபாய் உயர்ந்து 1,11,00ஒ விற்கப்படுகிறது.

கடந்த ஆறு நாட்களில் வெள்ளியின் விலை:

06.05.2025: 1 கிலோ- ரூ.1,11,000

05.05.2025: 1 கிலோ- ரூ.1,08,000

04.05.2025: 1 கிலோ- ரூ.1,08,000

03.05.2025: 1 கிலோ- ரூ.1,08,000

02.05.2025: 1 கிலோ- ரூ.1,09,000 01.05.2025: 1 கிலோ- ரூ.1,09,000