ஏர் இந்தியாவை விற்பதில் புதிய சிக்கல் எழுத்துளளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவின் கடன் சுமை காரணமாக அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவை விற்க முயற்சி செய்து வருகிறது. ஏர் இந்தியாவை இந்த கால் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2022 முதல்  காலாண்டில் விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் ஏர் இந்தியா பங்குகளை குறிவைத்து சிக்கல் எழுந்துள்ளது.


ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் தீவிரம் காட்டி வருகிறது. ஸ்பைஸ்ஜெட் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சிங்கும் மற்றும் டாடா குழுமம் ஏலத்தில் ஈடுபட்ட போது அதிக விலை நிர்ணயம் செய்தது டாடா குழுமம்.இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் அரசும் , தனியார் நிறுவனமும் வேலைகளை செய்து வரும் நிலையில், புதிய பிரச்னை எழுந்துள்ளது.




கெய்ர்ன் எனர்ஜி வழக்கு


கெய்ர்ன் எனர்ஜி  நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், நடுவர் தீர்ப்பாயம் தீர்ப்பை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு சாதகமாக அளித்துள்ளது. இந்த தீர்ப்பில், இந்திய அரசு, 1.2 பில்லியன் டாலர் தொகையை நஷ்ட ஈடாக கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு  கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.


இதனை தொடர்ந்து நஷ்டஈட்டைவிரைவாக வாங்க வேண்டும் என்று எண்ணி இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது  அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. 


இதனால் ஏர் இந்தியா விற்பனையில் தடைபடுமா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏர் இந்தியாவை யார் வாங்கினாலும், இந்த வழக்கை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.




இதனை தொடர்ந்து டாடாகுழுமம்,  டாடா சன்ஸ், விஸ்டாரா, டாடா ஸ்டீல் மற்றும் இந்தியன் ஹோட்டல் போன்ற இயக்க நிறுவனங்களைச் சேர்ந்த எம் அண்ட் ஏ நிபுணர்களைக் கொண்டு ஏர் இந்தியா சார்ந்த அனைத்து தகவல்களையும் முழுமையாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை யார் வாங்கினாலும், அதன் மீது இருக்கும் கடன் மற்றும் வழக்குகளை எதிர் கொள்ள வேண்டும் என நிலையில் உள்ளது. அரசின் நீண்ட கால பேச்சுவார்த்தை மற்றும் விடாமுயற்சி தொடர்ந்து இது போன்ற புதிய பிரச்சனைகள் வருவது ஏர் இந்தியா விற்பனையை கேள்விக்குள்ளாக்கும்.