TAHDCO Green Business Scheme Details: பசுமை வணிக திட்டத்திற்கான விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
பசுமை வணிக திட்டம்:
வருமானம் ஈட்டுவதுடன் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் பசுமை வணிக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஆதரவு பெற்ற இந்த திட்டம் மாநிலத்தில், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TAHDCO) நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுளன.
விண்ணப்பதாரருக்கான் தகுதிகள்:
பசுமை வணிகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் கவரேஜ் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:
- விண்ணப்பதாரர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
- அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற விண்ணப்பதாரர்கள் என இரண்டு தரப்புக்குமே இது பொருந்தும்.
ஊக்குவிக்கப்படும் திட்டங்கள்:
1. பேட்டரி மின்சார வாகனம் (ஈ-ரிக்ஷா)
2. கம்ப்ரெஸ்ட் ஏர் வெஹைகிள்
3. சூரிய ஆற்றல் கேஜெட்டுகள்
4. பாலி வீடுகள்
தொழிற்சாலைக்கான செலவு:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ. 30 மதிப்பிலான தொழிலுக்கான, மொத்த செலவில் 90% வரை கடனாக பெறலாம்.
வட்டி விகிதங்கள்
திட்டம் |
அலகு செலவு |
அதிகபட்ச கடன் வரம்பு யூனிட் விலையில் 90% வரை |
ஆண்டுக்கான வட்டி |
|
|
|
|
SCA/CA |
பயனாளி |
பசுமை வணிகத் திட்டம் (GBS) |
ரூ. 7.50 லட்சம் |
ரூ. 6.75 லட்சம் |
2% |
4% |
|
மேல் ரூ. 7.50 லட்சம் மற்றும் ரூ. 15.00 லட்சம் |
ரூ. 13.50 லட்சம் |
3% |
6% |
|
மேல் ரூ. 15.00 லட்சம் மற்றும் ரூ. 30.00 லட்சம் |
ரூ. 27.00 லட்சம் |
4% |
7% |
திருப்பி செலுத்தும் காலம்:
இத்திட்டத்தின் கீழ் உள்ள கடன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணை என்ற விகிதத்தில் திருப்பிச் செலுத்தப்படும். அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். கடன் பெற்ற பிறகு முதல் 6 மாதங்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த வேண்டியதில்லை. கூடுதலாக, நிதி பயன்பாட்டிற்காக SCA-க்கு 120 நாட்கள் தடை காலம் அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
உங்கள் பகுதியில் உள்ள டாட்கோ வங்கியை நேரில் அணுகு கூடுதல் விவரங்களை பெறலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- வங்கி விவரங்கள்
- சாதிச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- வசிப்பிடச் சான்றிதழ்