வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,244.91 புள்ளிகள் குறைந்து 47,587.12 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346.50 சரிந்து 14,271.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கொரோனா இரண்டாவது அலை அச்சத்தால், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.