இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. 


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 412.80 அல்லது 0.50% புள்ளிகள் சரிந்து 81,407.05 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 127.60 அல்லது 0.52% புள்ளிகள் சரிந்து 24,928.70 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. 


சர்வதேச சந்தைகளில் நிலவும் அசாதாரண நிலை, இரண்டாவது காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் காரணமாக சந்தைகள் சரிவுடன் இருக்கின்றன. அது ஆசிய, இந்திய பங்குச்சந்தையிலும் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளின் சரிவிற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 73 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 9 மாதங்களில் இல்லாத அளவு செப்டம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளது. உணவுகளின் விலை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததை 3.65 சதவீதத்தை விட டஹிகம் ஆகும். கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 5.69 சதவீதமாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபினான்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியவை சரிவுடன் உள்ளது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், டாக்டர் ரெட்டிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டாலோ, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பி.பி.சி.எல்., எஸ்.பி.ஐ.,  ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


ட்ரெண்ட், எம்&எம், நெஸ்லே, ஹீரோ மோட்டர்கார்ப், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஜெ.எஸ்.ட்புள்யு., மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபினான்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், டாடா ஸ்டீல், அப்பல்லோ மருத்துவமை, டி.சி.எஸ்., சிப்ளா, டாடா ஸ்டீல்,ம் ஐ.டி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், ஓ.என்.ஜி.சி., எ.டி.பி.சி., ஹெச்.சி.எல்., ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, ஹெச்.யு.எல்,, ஆக்ஸிஸ் வங்கி, சன் ஃபார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், பவர்கிரிட் கார்ப்ரேசன் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.